spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவரலட்சுமி நடிப்பில் சபரி... 5 மொழிகளில் படம் வௌியீடு...

வரலட்சுமி நடிப்பில் சபரி… 5 மொழிகளில் படம் வௌியீடு…

-

- Advertisement -
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் சபரி திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார். போடா போடி திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் திரைத்துறையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து,பாலா இயக்கிய தாரை தப்பட்டை உள்பட அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக மட்டுமன்றி வில்லி வேடத்திலும் நடித்து அசரடித்தவர் நடிகை வரலட்சுமி. சர்கார் படத்தில், இவர் விஜய்க்கு வில்லியாக நடித்து தூள் கிளப்பினார் நடிகை வரலட்சுமி. அடுத்து விஷால் நடித்த சண்டைக்கோழி 2 படத்திலும் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். தமிழ் தவிர தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடிகையாகவும், வில்லியாகவும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அண்மையில் ஹனுமான் படத்தில் அவர் நடித்திருந்தார்

இதனிடையே அவருக்கு திருமண நிச்சயமும் நடைபெற்று முடிந்தது. தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் சபரி. படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், மதுநந்தன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனரர். அறிமுக இயக்குநர் அனில் இப்படத்தை இயக்கி இருக்கிறார். படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். வரும் மே மாதம் 3-ம் தேதி இப்படம் வௌியாகிறது. இந்நிலையில், சபரி திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.

MUST READ