Homeசெய்திகள்சினிமாவரலட்சுமி சரத்குமார் நடிக்கும் 'தி வெர்டிக்ட்'.... டீசர் வெளியீடு!

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘தி வெர்டிக்ட்’…. டீசர் வெளியீடு!

-

- Advertisement -

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தி வெர்டிக்ட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் 'தி வெர்டிக்ட்'.... டீசர் வெளியீடு!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். அந்த வகையில் இவர் தமிழில் போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் தற்போது தி வெர்டிக்ட் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரிக்கிறார். இதனை அறிமுகம் இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் உடன் இணைந்து சுகாசினி, ஸ்ருதி ஹரிஹரன், வித்யூலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். புலனாய்வு சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற மே மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

அதன்படி இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியில் உள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

MUST READ