வீர தீர சூரன் படத்தில் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சியான் விக்ரம் நடிப்பில் ரா, கல்ட்- கமர்சியல் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வீர தீர சூரன். இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதன்படி இப்படத்தில் சியான் விக்ரம் காளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க துஷாரா விஜயன் கலைவாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சித்தா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இவர் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி வருகின்ற மார்ச் 27ஆம் தேதி இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் காட்டப்படுகிறது.

இதனை பார்க்கும்போது இப்படத்தில் வலுவான கன்டென்ட் இருக்கும் போல் தெரிகிறது. எனவே விக்ரமுக்கு இந்த படம் சிறந்த கம்பேக் படமாக இருக்கும் எனவும் விக்ரமின் ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.