விமல் நடித்துள்ள சார் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சார். இந்த படத்தினை பிரபல நடிகர் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்கியிருக்கிறார். இதில் விமலுக்கு ஜோடியாக சாயாதேவி கண்ணன் நடித்துள்ளார். மேலும் சரவணன், ரமா, சிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. இனியன் ஜெய் ஹரிஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க சித்து குமார் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர் விமல் வாத்தியாராக நடித்திருக்கிறார்.
இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தில் தெய்வ நம்பிக்கையை தவறாக பயன்படுத்தும் கும்பல் ஒன்று கிராமத்தில் வாழும் பொதுமக்களுக்கு கல்வி அறிவு கிடைக்கக்கூடாது எனவும் அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை இடிக்க வேண்டும் எனவும் முயற்சிக்கிறார்கள். நடிகர் விமல் இதனை எதிர்த்து போராடுகிறார் என்பது போன்று காட்டப்பட்டுள்ளது. அடுத்தது இந்த ட்ரெய்லரின் இறுதியில் படமானது விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விமலுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.