நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார். ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் அஜித் விடாமுயற்சியின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விடாமுயற்சி திரைப்படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்தை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மங்காத்தா. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். இதில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் அஜித் நடித்திருந்தார். அஜித்தின் 50 ஆவது படமான இந்த படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோரின் கூட்டணி விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்துள்ளது போல் வெங்கட் பிரபு, அஜித் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.