வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு சென்னை 600028, மங்காத்தா, மாநாடு என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவர், விஜய் நடிப்பில் ‘கோட்’ படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறார். இதற்கிடையில் இவர், கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்பாக பார்ட்டி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, ஜெயராம், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, ஷியாம், சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருந்தார். கலகலப்பான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
பலமுறை ரிலீஸுக்கு தயாரான நிலையிலும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை 2026 பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்காக ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே விரைவில் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


