spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படத்திலிருந்து பகத் பாசில் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

‘வேட்டையன்’ படத்திலிருந்து பகத் பாசில் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

வேட்டையன் படத்தில் இருந்து பகத் பாசில் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி உள்ளது.'வேட்டையன்' படத்திலிருந்து பகத் பாசில் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

நடிகர் பகத் ஃபாசில் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவர் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ராணா டகுபதி நடித்திருக்கிறார். நடிகர் பகத் பாஸில் இந்த படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

we-r-hiring

அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படக்குழுவினர் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பகத் பாசில் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நடிகர் பகத் பாசில், வேட்டையன் திரைப்படத்தில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அதேசமயம் இவருடைய கதாபாத்திரம் காமெடி கதாபாத்திரம் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ