Homeசெய்திகள்சினிமா27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்காக ஒலித்த குரல்.... வேட்டையன் படத்திலிருந்து ப்ரோமோ வெளியீடு!

27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்காக ஒலித்த குரல்…. வேட்டையன் படத்திலிருந்து ப்ரோமோ வெளியீடு!

-

- Advertisement -

வேட்டையன் படத்தில் இருந்து மனசிலாயோ பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார்.27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்காக ஒலித்த குரல்.... வேட்டையன் படத்திலிருந்து ப்ரோமோ வெளியீடு! லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், பஹத் பாஸில், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அடுத்ததாக வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி மனசிலாயோ எனும் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலில் மறைந்த நடிகரும் பாடகருமான மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மலேசியா வாசுதேவன், ரஜினிக்காக பல பாடல்களை பாடி இருக்கும் நிலையில் தற்போது 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்காக மீண்டும் அவரது குரலை திரும்பக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரோமோவில் இந்த பாடல் நாளை (செப்டம்பர் 9) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ