Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு!

‘வேட்டையன்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

வேட்டையன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு கொண்டுவரப்பட்டது.'வேட்டையன்' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு! போலி என்கவுண்டர் மற்றும் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்து பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது வேட்டையன். இந்த படத்தில் ரஜினி, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்க என்கவுண்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சன் நடித்திருந்தார். ராணா டகுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், பகத் பாசில் ரித்திகா சிங் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஏனென்றால் இந்த படத்தில் இருந்து வெளியான மனசிலாயோ பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இன்றுவரையிலும் இந்த படம் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வேட்டையன் திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியானது ரஜினிக்கும் பகத் பாசிலுக்கும் இடையிலான காட்சி. இது தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

MUST READ