ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். எஸ் ஆர் கதிர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ரஜினி இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறார். அமிதாப் பச்சன் இப்படத்தில் காவல்துறையின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். ராணா இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜெய் பீம் படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதே சமயம் ரஜினியின் அடுத்த மாஸ் ஹிட்டுக்காகவும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதன்படி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வேட்டையன் படத்தில் இருந்து மனசிலாயோ எனும் பாடல் முதல் பாடலாக வெளியாகி இணையத்தை கலக்கியது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் மற்ற பாடல்களின் ஆடியோக்களை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
எனவே வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது இதன் ட்ரெய்லர் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் அதற்கு முன்பாகவே மற்ற பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.