நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்க இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அஜித் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அதாவது ஏற்கனவே விடாமுயற்சியின் கிட்டத்தட்ட 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள 30 சதவீத படப்பிடிப்புகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியிருந்தது.
அதன்படி விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று (ஜூன் 24) அஜர்பைஜானில் தொடங்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு அஜித் மற்றும் ஆரவ் பங்கேற்கும் கார் சாகசக் காட்சிகளுடன் தொடங்கி இருக்கிறது.
#VidaaMuyarchi shooting resumed today with an highly risky car stunt 🎬✅#Ajithkumar🔥🔥pic.twitter.com/nSDw1tyIiz
— AmuthaBharathi (@CinemaWithAB) June 24, 2024
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ஏற்கனவே இது போன்ற காட்சிகள் படமாக்கப்படும்போதுதான் விபத்து ஏற்பட்ட காரணத்தாலும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் விடாமுயற்சி திரைப்படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.