Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் வைரலாகும் 'விடாமுயற்சி' மேக்கிங் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் ‘விடாமுயற்சி’ மேக்கிங் வீடியோ!

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இணையத்தில் வைரலாகும் 'விடாமுயற்சி' மேக்கிங் வீடியோ!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் அஜித்தின் 62 வது படம் ஆகும். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அனிருத்தின் இசையிலும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிலும் இந்த படம் உருவாகியுள்ளது. ஆக்ஷன் கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று விதமான லுக்கில் நடித்திருக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்கள், பாடல்கள், டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ