விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். மேலும் ஆரவ், ரெஜினா ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அதைத்தொடர்ந்து சில மாதங்கள் கழித்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு அஜர்பைஜான் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது.
அதே சமயம் நடிகர் அஜித், குட் பேட் அக்லி படத்தில் பிசியாக இருந்ததால் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தது இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.