விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை மீகாமன், தடையற தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் ஆரவ், ரெஜினா, விஜே ரம்யா, அரவிந்த் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அடுத்தது இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. எனவே இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி கடந்த வாரமே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் (டிசம்பர் 27 ஆம் தேதி) வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் வெளியாகும் இந்த பாடல் ரசிகர்களை திருப்திப்படுத்துமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.