Homeசெய்திகள்சினிமாடிக்கெட் முன்பதிவில் கெத்து காட்டும் 'விடாமுயற்சி'!

டிக்கெட் முன்பதிவில் கெத்து காட்டும் ‘விடாமுயற்சி’!

-

- Advertisement -

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிக்கெட் முன்பதிவில் கெத்து காட்டும் 'விடாமுயற்சி'!ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதாவது அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நடிகர் அஜித்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற பிப்ரவரி 6 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் விடாமுயற்சி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவில் கெத்து காட்டும் 'விடாமுயற்சி'!அதன்படி டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல திரையரங்குகள் ஹவுஸ் புல் ஆகிவிட்டதாகவும் முன்பதிவிலேயே இப்படம் சுமார் ரூ. 25 கோடியை தட்டி தூக்கி விடும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ