Homeசெய்திகள்சினிமாஅஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த 'விடாமுயற்சி' படக்குழு..... அடுத்தது அங்க தான்!

அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த ‘விடாமுயற்சி’ படக்குழு….. அடுத்தது அங்க தான்!

-

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படமானது அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த 'விடாமுயற்சி' படக்குழு..... அடுத்தது அங்க தான்!இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அஜர்பைஜானில் தொடங்கி பாதிக்கு மேலான படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இறுதி கட்ட படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. அதன்படி அஜர்பைஜானில் சண்டை காட்சிகளும் சில வசனம் பேசும் காட்சிகளும் படமாக்கப்பட்டன.அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த 'விடாமுயற்சி' படக்குழு..... அடுத்தது அங்க தான்! இதற்கிடையில் விடாமுயற்சி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து வருகின்ற வாரத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அங்கு பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்த 'விடாமுயற்சி' படக்குழு..... அடுத்தது அங்க தான்!இருப்பினும் விடாமுயற்சி திரைப்படம் 2024 தீபாவளிக்கு ரிலீஸாகுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஏற்கனவே அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படமும் தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் விரைவில் இந்த படம் முடிவுக்கு வர இருப்பது தற்போது ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.

MUST READ