spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமனைவி நயன்தாராவுக்கு விலை உயர்ந்த பரிசு... அசரடித்த கணவர் விக்னேஷ் சிவன்..

மனைவி நயன்தாராவுக்கு விலை உயர்ந்த பரிசு… அசரடித்த கணவர் விக்னேஷ் சிவன்..

-

- Advertisement -
நடிகை நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும் கலக்கி வருகிறார். அதே சமயம் தன் கணவர், குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டு வருகிறார். இதற்கிடையில் நயன்தாரா, டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி படத்திலும், நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அன்னபூரணி படத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜவான். ஷாருக்கான், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். ராக்ஸ்டார் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். நயன்தாராவின் பாலிவுட் அறிமுக படமான இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் நயன்தாராவின் அன்னபூரணி பட போஸ்டர்களும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இதனிடையே, நடிகை நயன்தாரா கடந்த 18-ம் தேதி தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். திரை நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், குடும்பத்தினருடன் அவர் பிறந்தநாள் கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் நயன்தாராவுக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குநர் விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் மேபாட்ச் எஸ் கிளாஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் புகைப்படத்தை பகிர்ந்து, விக்னஷே சிவனுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

MUST READ