Homeசெய்திகள்சினிமாஒன்னு ஒயின்..... இன்னொன்னு மைன்.... நயன் போட்டோவை பகிர்ந்த விக்கி!

ஒன்னு ஒயின்….. இன்னொன்னு மைன்…. நயன் போட்டோவை பகிர்ந்த விக்கி!

-

பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, நானும் ரௌடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் நான்கு மாதங்களில் வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஒன்னு ஒயின்..... இன்னொன்னு மைன்.... நயன் போட்டோவை பகிர்ந்த விக்கி!திருமணத்திற்கு பின்னரும் நடிகை நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே சமயம் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்க நாதனை வைத்து எல்ஐசி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு நயன்தாரா விக்னேஷ் இவனை இன்ஸ்டாகிராமில் இருந்து அன்பாலோ செய்ததாகவும் இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தது. அதன் பின்னர் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Ummm I’m Lost என்று பதிவிட்டு இருந்தார். நயன்தாரா வெளியிட்ட இந்த பதிவினால் ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர். அதே சமயம் தனது இரட்டை குழந்தைகளுடன் நயன் – விக்கி தம்பதியினர் துபாய் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.ஒன்னு ஒயின்..... இன்னொன்னு மைன்.... நயன் போட்டோவை பகிர்ந்த விக்கி! தற்போது துபாயில் தங்களின் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வரும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” வயசாக வயசாக மெருகேறிக் கொண்டு இருக்கும் இரண்டே விஷயம் ஒன்னு ஒயின்… இன்னொன்னு மைன் ” என்று நயன்தாராவின் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

MUST READ