Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகை தன்னுடன் நடிக்க மறுத்ததாக விஜய் ஆண்டனி வேதனை!

பிரபல நடிகை தன்னுடன் நடிக்க மறுத்ததாக விஜய் ஆண்டனி வேதனை!

-

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் பெறுகிறார்.பிரபல நடிகை தன்னுடன் நடிக்க மறுத்ததாக விஜய் ஆண்டனி வேதனை! ஆரம்பத்தில் இவர் இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்து இருந்தாலும் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசியான நடிகராக மாறியுள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள வள்ளி மயில், ஹிட்லர் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும் சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் 2 அன்று விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரபல நடிகை தன்னுடன் நடிக்க மறுத்ததாக விஜய் ஆண்டனி வேதனை!இந்த படமானது வெளியான நாள் முதலே சில சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரபல நடிகை ஒருவர் தன்னுடன் நடிக்க மறுத்ததாக கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை மேகா ஆகாஷ் தான். அதாவது, “மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே வேறொரு படத்தில் மேகா ஆகாஷிடம் என்னுடன் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த படம் என்ன படம் என்று நான் சொல்ல விரும்பவில்லை.பிரபல நடிகை தன்னுடன் நடிக்க மறுத்ததாக விஜய் ஆண்டனி வேதனை! ஆனால் அப்போது அவர் அந்த படத்தில் என்னுடன் நடிக்க மறுத்துவிட்டார்” என்று கூறிய விஜய் ஆண்டனி அந்த பேட்டியில், இருப்பினும் நான் சொல்லும் இந்த தகவலை மனம் உடைந்த விஜய் ஆண்டனி என்று எழுதிக் கொள்ளுமாறு நக்கலாய் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்த பிறகு நானும் மேகா ஆகாஷும் நண்பர்களாக மாறிவிட்டோம். இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பர் கிடைத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ