Homeசெய்திகள்சினிமாஅது நியாயம் இல்ல..... கொடுக்கணும்னு அவசியமும் இல்ல.... 'பராசக்தி' டைட்டில் குறித்து விஜய் ஆண்டனி!

அது நியாயம் இல்ல….. கொடுக்கணும்னு அவசியமும் இல்ல…. ‘பராசக்தி’ டைட்டில் குறித்து விஜய் ஆண்டனி!

-

- Advertisement -

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, பராசக்தி டைட்டில் குறித்து பேசி உள்ளார்.அது நியாயம் இல்ல..... கொடுக்கணும்னு அவசியமும் இல்ல.... 'பராசக்தி' டைட்டில் குறித்து விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் சக்தித் திருமகன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இதனை அருவி, வாழ் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் பிரபு இயக்கி இருக்கிறார். அரசியல் – திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது. அதன்படி தற்போது ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அது நியாயம் இல்ல..... கொடுக்கணும்னு அவசியமும் இல்ல.... 'பராசக்தி' டைட்டில் குறித்து விஜய் ஆண்டனி!இதற்கிடையில் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு தமிழைத் தவிர மற்ற மொழிகளில்  ‘பராசக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டதால் ‘சக்தித் திருமகன்’ படத்தின் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற பதிப்பிற்கு ‘பத்ரகாளி’ என்று தலைப்பு மாற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக விஜய் ஆண்டனி சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி அவர், “ஏவிஎம்- ல் ‘பராசக்தி’ பட டைட்டிலை கேட்டு முயற்சி செய்தேன். ஆனால் ‘பராசக்தி’ என்பது ஒரு புகழ் பெற்ற டைட்டில் என்பதாலும், என்னுடைய படங்கள் தோல்வி படங்களாக இருந்ததாலும் அந்த டைட்டிலை அவர்கள் கொடுக்கவில்லை. எனக்கு மார்க்கெட் இல்லை என்பதால் அதை எப்படி கொடுப்பார்கள். அது நியாயம் இல்லை தானே. அவர்கள் கொடுக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை தானே. எனவே ‘சக்தித் திருமகன்’ படத்தை முடித்துவிட்டு, அதை போட்டு காட்டிவிட்டு அந்த டைட்டிலை கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் இன்னொரு படத்திற்காக அந்த டைட்டிலை எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் பக்கத்தில் நியாயம் இருந்தது. அவர்கள் முறைப்படி அணுகியதால் அவர்களுக்கு அது கிடைத்தது. அவர்களிடமும் எந்த தவறும் இல்லை. சரி தமிழில் தான் கிடைக்கவில்லை. மற்ற மொழிகளில் அதை பதிவு செய்வோம் என பதிவு செய்தேன். ஆனால் அவர்கள் மற்ற மொழிகளில் பதிவு செய்வதை மறந்து விட்டார்கள்.

we-r-hiring

அதேசமயம் தெரியாமல் டீசர் அறிவிப்பை தெலுங்கில் வெளியிட்டுவிட்டார்கள். அவர்கள் அறிவித்ததால், நான் என்னுடைய டைட்டில் என்று சொன்னேன். அதன் பிறகு அது பெரிய படம். தெரிஞ்ச நண்பரும் கூட என்பதால் அந்த டைட்டிலை கொடுத்துவிட்டேன். இப்போது என்னுடைய படத்திற்கு மற்ற மொழிகளில் ‘பத்ரகாளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் டைட்டிலுக்காக முரண்டு பிடிக்காமல், மனதார விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

MUST READ