விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக தற்போது நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வள்ளி மயில் எனும் திரைப்படம் ஏற்கனவே உருவாகியுள்ள நிலையில் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தவிர இவர் நடித்திருக்கும் மார்கன் திரைப்படம் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும் இவர் சக்தித் திருமகன், லாயர் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர், மீண்டும் இயக்குனர் சசியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் எனும் திரைப்படம் வெளியானது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது சசி – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.