நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருந்த கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. அடுத்ததாக விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நேற்று (செப்டம்பர் 14) இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது கட்சி கொடியையும் கட்சி பாடலையும் வெளியிட்டு இருந்தார் விஜய்.
விரைவில் கட்சி மாநாடையும் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் இன்று (செப்டம்பர் 15) ஓணம் பண்டிகை கொண்டாடும் கேரள மக்களுக்கு சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நெடிஷன்கள் பலரும் விஜயை விமர்சித்து வருகின்றனர். அதாவது நடிகர் விஜய் தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி ஆகிய பண்டிகைகளுக்கு தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் தற்போது மட்டும் கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த #ஓணம் நல்வாழ்த்துகள்!
എന്റെ സ്വന്തം മലയാളി സുഹൃത്തുക്കൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.#HappyOnam!
— TVK Vijay (@tvkvijayhq) September 15, 2024
அதிலும் விஜயின் ரசிகர் ஒருவர், “விநாயகர் சதுர்த்திக்கு உங்களிடமிருந்து வாழ்த்து எதுவும் வரவில்லை. ஒரு ரசிகனாகவும் கழகத்தின் தொண்டனாகவும் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் அனைத்து தரப்பு விழாக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது கருத்தினை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.