விஜய் தேவரகொண்டா நடிக்கும் கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது கிங்டம் எனும் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் 12 வது படமாகும். இதனை கௌதம் தின்னனுரி இயக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கௌதம் தின்னனரி ஏற்கனவே ஜெர்ஸி, மல்லி ராவா ஆகிய படங்களை இயக்கி தேசிய விருது வென்ற நிலையில் தற்போது இவர் இயக்கியுள்ள கிங்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இப்படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜோமன் டி ஜான், கிரிஷ் ஆகியோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். நவீன் நூலி இதன் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் பாக்கியஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெறும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வருகின்ற மே 30 அன்று திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்திலிருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் தற்போது படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி அந்த அறிவிப்பில், “கிங்டம் திரைப்படம் முதலில் மே 30இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது நம் நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ப்ரோமோஷன்களையும், கொண்டாட்டங்களையும் மேற்கொள்வது கடினமாகியுள்ளது. எனவே இதன் ரிலீஸ் தேதி ஜூலை 4-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 4 அன்று திரையரங்குகளில் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -