கல்கி2898AD படமானது நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிக்கும் சந்தோஷ் நாராயணனின் இசையிலும் இந்தப் படம் உருவாகி வருகிறது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் தயாராகி வரும் இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதன்படி நடிகர் கமல்ஹாசன் முதல் பாகத்தில் வெறும் 19 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவார் என்றும் அடுத்த பாகத்தில் தான் நீண்ட நேரம் கமல் தோன்றுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன. அவரது கதாபாத்திரம் குறித்த தகவலை பட குழு சர்ப்ரைஸாக வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். இவ்வாறு பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கல்கி2898AD திரைப்படமானது 2024 ஜூன் மாதம் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஜூன் 10 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -