விஜய் தேவரகொண்டா நடிக்கும் கிங்டம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரை உலகில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. கடைசியாக விஜய் தேவரகொண்டா, பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898AD திரைப்படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்தார். அடுத்தது இவர், கௌதம் தின்னனுரி இயக்கத்தில் தனது 12-வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கிங்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஜோமன் டி ஜான், கிரிஷ் கங்காதரன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர். அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழில் இந்த டீசருக்கு நடிகர் சூர்யா, குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த டீசரில் வன்முறை, யுத்தம் போன்றவை காட்டப்படுகிறது. மேலும் அதற்கேற்ப சூர்யாவின் கம்பீரமான குரலும் அமைந்துள்ளது. இந்த மிரட்டலான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசரின் இறுதியில் இப்படம் 2025 மே மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.