spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநெல்லை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விஜய்..... வைரலாகும் புகைப்படங்கள்!

நெல்லை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விஜய்….. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். அதன்படி சென்னையில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில் தற்போது சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்துள்ளார்.

பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார். காய்கறி, மளிகை பொருட்கள்,அரிசி, கோதுமை, சர்க்கரை
போன்ற அத்தியாவசியமான நிவாரண பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார். அவர்களின் குறைகளை கேட்டறிந்து சிறு தொகையையும் வழங்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அவர்களின் குறைகளை கேட்டறிந்து சிறு தொகையையும் வழங்கியுள்ளார்.நெல்லை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விஜய்..... வைரலாகும் புகைப்படங்கள்!

we-r-hiring

இது ஒரு நிகழ்ச்சியாகவே நெல்லையில் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரம் நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5000, வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கி உள்ளார்.
நெல்லை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விஜய்..... வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிகழ்ச்சியில் விஜயை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர்களை அவரவர் வீட்டிலேயே கொண்டு சேர்ப்பது போன்றவை நடைபெற்று வருகிறது. விஜய் பொதுமக்களிடம் ஆதரவாகவும், அன்பாகவும் இருப்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

புகைப்படங்களை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

MUST READ