Homeசெய்திகள்சினிமாமாநாட்டில் பேச தொடங்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

மாநாட்டில் பேச தொடங்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

-

- Advertisement -

விஜயின் த.வெ.க முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டில் உள்ள வி. சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் பேச தொடங்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்ட இம்மாநாட்டில் நடிகர் விஜய், கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து த.வெ.க கொடியை ஏற்றினார் விஜய். பின்னர் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் ஆகிய ஐந்து கொள்கை தலைவர்களிடம் பெற்ற கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. அந்த பாடலில் விஜயின் தோலை பிடித்து பெரியார் வழிகாட்டுவது போல் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநாட்டில் பேச தொடங்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!மேலும் சமூக நீதி, சமத்துவ, கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் தன் உரையை தொடங்குவதற்கு முன்பாக தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர், தனது தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னர் மேடை ஏறி பேசத் தொடங்கினார்.

MUST READ