Homeசெய்திகள்சினிமாமாநாட்டில் த.வெ.க கொடியேற்றினார் விஜய்!

மாநாட்டில் த.வெ.க கொடியேற்றினார் விஜய்!

-

தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் த.வெ.க கொடியேற்றினார் விஜய்!இம்மாநாட்டில் கலந்து கொள்ள ரசிகர்களும் தொண்டர்களும் படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கிட்டதட்ட 8 லட்சம் பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இம்மாநாடு தொண்டர்களுக்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடைக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய், அதைத்தொடர்ந்து 800 மீட்டர் தூரத்திற்கு உற்சாகத்துடன் ரேம்ப் வாக் செய்து தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது ராணுவ உடையில் தொண்டர் ஒருவர் வந்து விஜய்க்கு சல்யூட் அடித்தார். அதே சமயம் தொண்டர்கள் த.வெ.க கட்சித் தொண்டினை வீச விஜய் அவைகளை தனது கழுத்தில் அணிந்து கொண்டார். அடுத்தது மேடை திரும்பிய விஜய் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மாநாட்டில் த.வெ.க கொடியேற்றினார் விஜய்!பின்னர் ரிமோட் ஸ்விட்சை அழுத்தி த.வெ.க கொடியை ஏற்றி வைத்தார். த.வெ.க கொடியானது 100 அடி உயர கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி வருகின்றனர்.

MUST READ