விஜயின் 69 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது அரசியல்வாதியாக மாறி உள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது என்றும் இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இது தவிர நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி ஒன்று இந்த படத்திலும் இடம்பெறும் என தகவல் வெளியாகி வருகிறது. அடுத்தது இந்த படத்தில் இன்னும் பல சர்ப்ரைஸ்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகமாகி வரும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் விஜய், இந்த பிறந்த நாளுக்கு எந்த அப்டேட்டும் வெளியிட வேண்டாம் என்றும் படத்தின் ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெளியிடலாம் என்று கூறிவிட்டார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் ஜனநாயகன் படத்திலிருந்து ஏதேனும் சின்ன அப்டேட்டாவது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி விஜய் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் போஸ்டர் விஜயின் பிறந்தநாளில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -