நடிகர் விஜய், ஜனநாயகன் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார்.
நடிகர் விஜயின் 69 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். சத்யன் சூர்யன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அரசியல் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இப்படமானது 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மூன்று நாட்களாக கொடைக்கானல் அருகில் தாண்டிக்குடி கிராமத்தில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
Anneyyyyy @TVKVijayHQ pic.twitter.com/wY2pCfD2YV
— TVK Vijay Trends (@TVKVijayTrends) May 5, 2025

அப்போது விஜயை கிராம மக்கள் அன்புடன் வரவேற்று வழி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய், கொடைக்கானல் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார். அதற்காக மதுரை வழியாக சென்னை திரும்பும் விஜய்க்கு மதுரை விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் இதற்கிடையில் அரசியல் தொடர்பான பணிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.