விஜய் சேதுபதி தற்போது பிரபல இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரிக்கிறார். ட்ரெயின் சம்பந்தமான கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
அதே சமயம் விஜய் சேதுபதி மகாராஜா, விடுதலை 2, VJS51 உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதன் அடுத்த கட்ட பணிகளான டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. எனவே இந்த மூன்று படங்களுக்குமே விஜய் சேதுபதி டப்பிங் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் மிஸ்கின் டிரெயின் படத்தின் படப்பிடிப்பை ஒரு நாள் முழுவதும் இழுக்கிறாராம். அதாவது காலையிலிருந்து இரவு வரை இடைவெளி இல்லாமல் ட்ரெயின் படத்தை படமாக்குகிறாராம் மிஸ்கின். இதன் காரணமாக விஜய் சேதுபதிக்கு டப்பிங் பணிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறதாம்.
இருப்பினும் விஜய் சேதுபதி, படங்களின் டப்பிங் பணிகளை முடித்தால் தான் அந்த படங்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.