நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ட்ரெயின் விடுதலை 2, ஏஸ் போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படமான மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை குரங்கு பொம்மை படம் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஜெகதீஷ் மற்றும் சுதன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்த நிலையில் அஜீனிஸ் லோக்நாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி தவிர அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், மம்தா மோகன்தாஸ், அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நேற்று (ஜூன் 14) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. படத்தில் எமோஷனல் காட்சிகளும் வன்முறை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த படமானது முதல் நாளில் 4.3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
A year ago on #Maharaja shooting spot
@VijaySethuOffl #Maharaja#VJS50 pic.twitter.com/DnwiT9xHxP
— Nithilan Saminathan (@Dir_Nithilan) June 15, 2024
இந்நிலையில் விஜய் சேதுபதி இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை பகிரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த வீடியோ மகாராஜா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி, நித்திலன் சாமிநாதனிடம், “உங்களுடன் பணியாற்றுவதில் சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இந்த வீடியோவை சேர்ந்து வெளியிடுவோம்” என்று கூறியுள்ளார்.