Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி இஸ் பேக்... மகாராஜா திரைப்படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் இதோ... விஜய் சேதுபதி இஸ் பேக்… மகாராஜா திரைப்படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் இதோ…
- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்

படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்திற்கு படுஜோராக வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தை கண்ட ரசிகர்கள், இத்திரைப்படம் விஜய் சேதுபதிக்கு கம்பேக்காக அமையும் என்று தெரிவித்துள்ளனர். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை, பல முடிச்சுகளும், திருப்பங்களும் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இது தான் அடுத்த காட்சி என நியமிக்க முடியாத அளவு, திரைக்கதையை மிகவும் சுவாரஸ்யமாக அமைத்துள்ளார் எனவும் ரசிகர்கள் பாராட்டினர். இருப்பினும், இரண்டாம் பாதியில் வன்முறையை கொஞ்சம் குறைத்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் விமர்சனம் கூறி இருக்கின்றனர்.