Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

-

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தொடர்ந்து பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து ட்ரெயின் திரைப்படத்திலும் விடுதலை இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அதே சமயம் தனது 51 வது திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும். இந்தப் படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனிஷ் லோக்நாத் இசையமைக்க ஜெகதீஷ் பழனிசாமி, சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர் வரை பட குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் மே 16ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ