spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி, திரிஷா கூட்டணியின் '96 பாகம் 2' .... அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார்!

விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணியின் ’96 பாகம் 2′ …. அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார்!

-

- Advertisement -

இயக்குனர் பிரேம்குமார், 96 பாகம் 2 குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணியின் '96 பாகம் 2' .... அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார்!

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 96. பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த ராம் (விஜய் சேதுபதி) – ஜானு (திரிஷா) ஆகிய இருவரும் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேரிடுகிறது. அத்தனை வருடங்களுக்குப் பிறகும் இருவருக்கும் இடையிலான காதல் எவ்வளவு புனிதமானது எவ்வளவு ஆழமானது என்பதை மிகவும் அழகாக சொல்லி இருந்த திரைப்படம் தான் 96. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்றுவரையிலும் பலரின் ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது. இந்த படத்தினை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருந்த நிலையில் அடுத்ததாக இவர் கார்த்தி நடிப்பில் மெய்யழகன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் பிரேம்குமார் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் 96 பாகம் 2 படம் குறித்து பேசி உள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணியின் '96 பாகம் 2' .... அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார்!அப்போது அவர் பேசியதாவது, “96 பாகம் 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைய இருக்கிறது. மீதம் 25 சதவீதம் மட்டும் எழுத வேண்டி உள்ளது. எனவே முழுவதுமாக முடித்த பின்னர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். ஏனென்றால் இருவருமே தற்போது பிஸியான நடிகர்கள். அதேசமயம் 96 பாகம் 2இல் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவை தவிர  வேறு யாரும் நடிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ