Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 'மகாராஜா' பட முதல் பாடல் வெளியீடு!

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ பட முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -
kadalkanni

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா‘ பட முதல் பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து வைத்துள்ளார். விஜய் சேதுபதியின் 'மகாராஜா' பட முதல் பாடல் வெளியீடு!இவர் கைவசம் பல படங்களை வைத்துள்ள நிலையில் தனது ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படம் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அஜீனிஸ் லோக்நாத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி தவிர பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

அதை தொடர்ந்து படமானது வருகின்ற ஜூன் 14 அன்று வெளியாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தாயே தாயே எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருக்கும் நிலையில் சித் ஸ்ரீராம் பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ