Homeசெய்திகள்சினிமா50வது நாளில் வெற்றிக்கொடி நட்டு வைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'!

50வது நாளில் வெற்றிக்கொடி நட்டு வைத்த விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

-

- Advertisement -

வெற்றிகரமான 50வது நாளில் விஜய் சேதுபதியின் மகாராஜா!50வது நாளில் வெற்றிக்கொடி நட்டு வைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றவர். அதே சமயம் இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் தொடர் வெற்றி படங்களை தந்தாலும் சமீப காலமாக இவர் சிங்கிளாக நடித்து வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்களை விட வில்லனாக நடித்து வெளியான படங்களே வசூல் வேட்டை நடத்தியது. ஆனால் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான மகாராஜா திரைப்படம் அந்த எண்ணத்தை உடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சோலோவாக சம்பவம் செய்திருக்கிறார். இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்த நிலையில் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்திருந்தார். மேலும் நட்டி நடராஜ், சிங்கம்புலி, அபிராமி,, திவ்யபாரதி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஓடிடியில் வெளியான பின்பும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ள மகாராஜா திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 2) தனது 50வது நாளில் வெற்றிக்கொடியை நட்டு வைத்துள்ளது. இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ