விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது 8வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் ரஞ்சித், ரவீந்தர், தர்ஷா குப்தா, ஜாக்குலின் உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். அதேசமயம் மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த சாச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட இரண்டாவது நாளே எலிமினேட் செய்யப்பட்டார். இன்னும் சில வாரங்களில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஏற்கனவே சிந்துபாத் படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது PHOENIX (பீனிக்ஸ்)- வீழான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அனல் அரசு இயக்கி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.