தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மெரி கிறிஸ்மஸ் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தாய் படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிறிஸ்மஸ் தினத்தில் இரவு விஜய் சேதுபதியும், கத்ரீனா கைஃப்பும் தியேட்டரில் சந்திக்கிறார்கள். அன்று இரவே கத்ரீனா கைப்பின் வீட்டிற்கு விஜய் சேதுபதி செல்கிறார். அப்போது அங்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்திற்கு பின் என்ன நடக்கிறது என்பதை இப்படத்தின் மீதி கதையாகும். இந்த படத்தில் மேலும் ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். விஜய் சேதுபதியின் காமெடிகள் படத்திற்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது.
வித்தியாசமான திரில்லர் கதையை விருந்தாக படைத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 2.3 கோடியே கடந்துள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இனிவரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணியின் மெரி கிறிஸ்மஸ்…… முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு!
-
- Advertisement -