Homeசெய்திகள்சினிமாவிஜய் குரலில் மற்றுமொரு பாடல் நாளை வெளியீடு..... 'கோட்' படத்தின் புதிய அப்டேட்!

விஜய் குரலில் மற்றுமொரு பாடல் நாளை வெளியீடு….. ‘கோட்’ படத்தின் புதிய அப்டேட்!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். விஜய் குரலில் மற்றுமொரு பாடல் நாளை வெளியீடு..... 'கோட்' படத்தின் புதிய அப்டேட்!இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் ,பிரபு தேவா ,அஜ்மல், சினேகா லைலா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு ரஷ்யா, திருவனந்தபுரம், சென்னை, இலங்கை போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து படத்தின் வி எப் எக்ஸ் பணிகளும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வகைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் விஜய் குரலில்
விசில் போடு எனும் முதல் பாடலும் வெளியானது. அதைத் தொடர்ந்து நாளை ஜூன் 22 விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் சின்ன சின்ன கண்கள் எனும் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரின் மூலம் இந்த பாடல் விஜய் மற்றும் சினேகா ஆகிய இருவருக்குமான பாடல் என்று தெரியவந்துள்ளது.
விஜய் குரலில் மற்றுமொரு பாடல் நாளை வெளியீடு..... 'கோட்' படத்தின் புதிய அப்டேட்!வசீகரா படத்திற்கு பிறகு விஜய், சினேகா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளதாலும் இந்தப் பாடலும் விஜய் குரலில் உருவாகி இருப்பதாலும்
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  விஜயின் ஐம்பதாவது பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்ற அடுத்தடுத்த அப்டேட்டுகளை விரைவில் வெளியிடப்படும் என்று கோட் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ