Homeசெய்திகள்சினிமாமீண்டும் இளைய தளபதியாக விஜய்.... 'தி கோட்' படத்தின் ஸ்பார்க் பாடல் வெளியீடு!

மீண்டும் இளைய தளபதியாக விஜய்…. ‘தி கோட்’ படத்தின் ஸ்பார்க் பாடல் வெளியீடு!

-

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியல்வாதியாகவும் நடிகராகவும் வலம் வருகிறார். மீண்டும் இளைய தளபதியாக விஜய்.... 'தி கோட்' படத்தின் ஸ்பார்க் பாடல் வெளியீடு!இவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் உடன் இணைந்து சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் பின்னணி வேலைகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

அதே சமயம் பட குழுவினர் படத்தின் முதல் இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஸ்பார்க் எனும் மூன்றாவது பாடல் இன்று (ஆகஸ்ட் 3) வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடிகர் விஜய் டிஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் இளமையான தோற்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளார். எனவே விஜயை மீண்டும் இளைய தளபதியாக பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் பலரும் இப்பாடலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் வ்ருஷா பாலு இருவரும் இணைந்து பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ