விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 627 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து விஜய் தனது 68வது படமான தி கோட் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சித்தார்த்தா நுனி படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இப்படம் 2024 செப்டம்பர் 5 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 22) விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணி அளவில் சின்ன சின்ன கண்கள் எனும் இரண்டாவது பாடலும் வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கோட் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் 50 வயது அதிலும் இளமையாகவும் துருதுருவெனவும் இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.