Homeசெய்திகள்சினிமாவிஜய் டிவி புகழ் ரக்க்ஷனின் 'மறக்குமா நெஞ்சம்'.... ஓடிடியில் வெளியீடு!

விஜய் டிவி புகழ் ரக்க்ஷனின் ‘மறக்குமா நெஞ்சம்’…. ஓடிடியில் வெளியீடு!

-

விஜய் டிவி புகழ் ரக்க்ஷனின் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் ஓடிடி வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம்
பிரபலமானவர் ரக்ஷன். இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் உடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் திரைப்படத்தில்துல்கர் சல்மானுக்கு நண்பராக நடித்து பெயர் பெற்றார். அதே சமயம் ரஜினியுடன் இணைந்து வேட்டையன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.விஜய் டிவி புகழ் ரக்க்ஷனின் 'மறக்குமா நெஞ்சம்'.... ஓடிடியில் வெளியீடு!இதற்கிடையில் மறக்குமா நெஞ்சம் எனும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரக்ஷன். இதில் ரக்சன் உடன் இணைந்து மலினா, தீனா, முனிஷ்காந்த், ப்ராங்க்டர் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை யோகேந்திரன் எழுதி இயக்கியிருந்தார். இதனை ஃபிலியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் குவியம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய சச்சின் வாரியர் இசையமைத்திருந்தார். பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.விஜய் டிவி புகழ் ரக்க்ஷனின் 'மறக்குமா நெஞ்சம்'.... ஓடிடியில் வெளியீடு! இந்த படம் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படம் தற்போது அமேசான் பிரைம் மற்றும் டென்ட் கொட்டா போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

MUST READ