Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

-

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சகாப்தம் மற்றும் மதுரவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகும் நடித்திருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வால்டர் பட இயக்குனர் U அன்பரசன் எழுதி இயக்கும் தலைப்பிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார். இதில் சண்முக பாண்டியனுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், கஸ்தூரிராஜா, யாமினி சந்தர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காட்டு யானைகளை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. முழுக்க முழுக்க காட்டுக்குள் படமாக்கப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  (ஆகஸ்ட் 25) நாளை வெளியாகும் என்று
படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் படத்தில் பர்ஸ்ட் லுக்கை கேப்டன் விஜயகாந்த் வெளியிடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ