நடிகர் விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி 627 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக விஜய் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (THE GREATEST OF ALL TIME) படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இதில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா , அஜ்மல், மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளின் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் படப்பிடிப்பானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தி கோட் படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். எனவே பிரமாண்டமாக திரையிடப்பட படமானது முழு வீச்சல் தயாராகி வருகிறது. அதன்படி நடிகர் விஜய் இதன் டப்பிங் பணிகளை 50% நிறைவு செய்துவிட்டார். மேலும் வி எப் எக்ஸ் அனைவரும் நிறைவடைந்தன. அதைத்தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் விசில் போடு எனும் முதல் பாடல் வெளியான நிலையில் அடுத்ததாக இரண்டாவது பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டாவது பாடலை ஜூன் மாதத்தில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இலங்கையில் விஜய் இல்லாமல் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜூன் 22 விஜயின் பிறந்த நாளில் தி கோட் படக்குழுவினர் விஜயின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஆகையால் விஜய்யின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது என்ற பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.