விஜய் நடிப்பில் உருவாகியிருந்த கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க, அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி இருந்தார். மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்த் காட்டப்பட்டிருந்தார். அடுத்தது திரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
மேலும் அஜித், சூர்யா, தோனி ஆகியோரின் குறியீடுகளும் படத்தில் காட்டப்பட்டிருந்தது. படத்தில் இடம்பெற்றிருந்தால் மட்ட பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. இவ்வாறு இந்த படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று கிட்டத்தட்ட 413 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டைரக்டர் கட் ஓடிடியில் விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சொல்லியதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். எனவே திரையரங்குகளில் பார்க்காத கோட் படத்தில் மற்ற காட்சிகளை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கோட் படத்தில் நீட்டிக்கப்பட்ட பதிப்பு வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -