சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் பல சிக்கல்களுக்கு பிறகு நேற்று (மார்ச் 27) மாலை திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த படத்தைக் காண காலை 9 மணி முதல் திரையரங்க வாசலில் கூட்டம் கூட்டமாக பல ரசிகர்கள் ஆரவாரத்துடன் கோஷம் எழுப்பி படத்தை கொண்டாடி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இந்த படம் தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இருப்பினும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம் என்பதைப் போல, சொல்லி அடித்துள்ளார் விக்ரம். அவர் மட்டுமில்லாமல் சுராஜ், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா ஆகியோரும் நான்கு தூண்களைப் போல் தங்களின் நடிப்பினால் படத்தை தாங்கி பிடித்துள்ளனர். மேலும் பாகம் 2ஐ முதலில் வெளியிட வேண்டும் என்ற அருண்குமாரின் புதிய யுக்தி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அடுத்தது ஜி.வி. பிரகாஷின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. இவ்வாறு இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
#VeeraDheeraSooran – #ChiyaanVikram watched the film with fans & left in an auto due to the crowd..💥 pic.twitter.com/iH9O7aua4V
— Laxmi Kanth (@iammoviebuff007) March 28, 2025
இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் இணைந்து படத்தை காண வந்த சியான், படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அதே சமயம் படத்தை பார்த்த பின்னர் ரசிகர்களின் கூட்டம் சூழ்ந்ததால் அவர் விறுவிறுவென்று ஆட்டோவில் ஏறி சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.