Homeசெய்திகள்சினிமாநடிகை லட்சுமி மேனன் உடன் திருமணமா!? நடிகர் விஷால் அளித்துள்ள பதில்!

நடிகை லட்சுமி மேனன் உடன் திருமணமா!? நடிகர் விஷால் அளித்துள்ள பதில்!

-

- Advertisement -

லட்சுமி மேனன் உடனான திருமணம் குறித்த செய்திகளுக்கு விஷால் பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவருடைய நடிப்பில்  படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இருப்பினும் விஷால் நடிப்பில் வெளியான கடைசி சில படங்கள் தொடர் தோல்வியைச்  சந்தித்து வருகின்றன.

 தற்போது அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் விஷால் நடிகர் லட்சுமி மேனனைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார். 

 

“பொதுவாக என்னைப் பற்றி வெளியாகும் எந்த போலி செய்திகளுக்கும் வதந்திகளுக்கும்நான் பதிலளிப்பதில்லை. ஏனெனில் அது பயனற்றது என்று எனக்கு தெரியும். ஆனால் இப்போது லட்சுமி மேனனுடனான எனது திருமணம் குறித்து வதந்தி பரவி வருகிறது. நான் இதை முற்றிலும் மறுக்கிறேன். அந்த செய்திகள் முற்றிலும் உண்மை இல்லை மற்றும் ஆதாரமற்றது.

அவர்  ஒரு நடிகை என்பதைத் தாண்டி ஒரு பெண் என்ற வகையில் தான் நான் இது குறித்து பேசுகிறேன்.  இப்படி செய்தி வெளியிடுவதன் மூலம் ஒரு பெண்ணை ஆக்கிரமித்து கெடுக்கிறீர்கள். மேலும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது நற்பெயரை கேவலப்படுத்துகிறீர்கள். 

நான் யாரை இந்த மாசம் இந்த தேதியில் திருமணம் செய்யப் போகிறேன் என்று குறிப்பிட்டு சொல்ல இது ஒன்றும் பெருமுடா முக்கோணம் கிடையாது.  இது உங்களுக்கு பதில் அளித்திருக்கும் என்று நம்புகிறேன். நேரம் வரும்போது

எனது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். “ என்று தெரிவித்துள்ளார். 

 

விஷால் மற்றும் லட்சுமி மேனன் இருவரும் இணைந்து பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ