கௌதம் மேனன் இயக்கும் யோஹன் படத்தில் விஜய்க்கு பதில் விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் நடிகர் விஷால் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவித்தார். அதில் ஒன்று கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தான் நடிக்கப் போவதாக கூறியிருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால் நடிக்க உள்ள படம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக கௌதம் வாசுதேவன் என இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்த படம் தான் யோஹன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன், யோஹன் படத்தை தற்போது மீண்டும் கையில் எடுத்திருப்பதாகவும் அதில் விஜய்க்கு பதிலாக விஷால் நடிக்க போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் யோகம் திரைப்படத்தின் கதையை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.