நடிகர் விஷ்ணு விஷால், இரண்டு வானம் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் ஓ மாம்பழ சீசனில், ஆர்யன் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் இரண்டு வானம் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திபு நினன் தாமஸ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Last schedule ….Last few days..#IranduVaanam pic.twitter.com/De8IzSwx9e
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) June 3, 2025

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் இப்படம் குறித்த புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அதன்படி இரண்டு வானம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். எனவே இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.